ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சகோரிக்கையை வலியுறுத்தி. மாநிலம் முழுதும் டிட்டோ ஜாக் பேரணி, ஆர்ப்பாட்டம்.

ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சகோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுதும் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுக்குழு சார்பில் ஞாயிற்றுக்கிழமை பேரணி, ஆர்ப்பாட்டம்நடைபெற்றது. 

#ஆசிரியருக்கான தகுதித் தேர்வை அரசு ரத்து செய்ய வேண்டும் 
#இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் 
# தமிழ், வரலாற்று பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி பதவி உயர்வின் மூலம் நிரப்ப வேண்டும். 
#தேர்வுநிலை, சிறப்பு நிலைக்கு தனியாக ஊதிய விகிதமும், தர ஊதியமும் நிர்ணயிக்க வேண்டும்.
 #புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 
# தொடக்கக் கல்வித்துறையில் தமிழ் வழிக் கல்வி முறையை தொடர்ந்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோ ஜாக்) சார்பில்மாநிலம் முழுதும் பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பாளையங்கோட்டை: பாளையங்கோட்டை லூர்துநாதன் சிலை அருகில் இருந்து புறப்பட்ட பேரணியை டிட்டோ-ஜாக் மாநில உயர்நிலைக்குழு உறுப்பினர் அம்பை ஆ.கணேசன் தொடங்கி வைத்து கோரிக்கை குறித்து பேசினார். இப்பேரணி தெற்கு பிரதான சாலை வழியாக ஜவாஹர் திடலை வந்தடைந்தது.

இதையடுத்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளர் கா.மைக்கேல்ஜார்ஜ்கமலேஷ் தலைமை வகித்தார். அமைப்பின் செயலர் செ. சாம்மாணிக்கராஜ், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கூட்டணி மாவட்டச் செயலர்கள் இ. திருஞானசம்பந்தம், இ.சுடலைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளின் சங்க மாநில துணைத் தலைவர் ஏ. ஜேம்ஸ்பொன்னையா, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் பி.ராஜ்குமார்,தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் மி. வின்சென்ட், தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்டத் தலைவர் வெ. அய்யனார், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் பி. ரெங்கநாதன்,ஆசிரியர் மன்ற மாவட்டப் பொருளாளர் எஸ். ஷேக்முகம்மதுரபீக், ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் செ. ரமேஷ், வி. தங்கமணி ஆகியோர்கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து 1000 க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் பங்கேற்றனர்.

Comments

Popular posts from this blog