டி.இ.டி., தேர்வில் சிறப்பு தேர்ச்சியா? மார்ச் 12 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு-Dinamalar 

சென்னை : ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), முதல்வர், 5 சதவீத சலுகை அளித்ததால் தேர்ச்சி பெற்ற, 47 ஆயிரம் பேருக்கு, மார்ச், 12 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. 

ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவிப்பு: டி.இ.டி., தேர்ச்சி மதிப்பெண்ணில், 5 சதவீத சலுகை தரப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண் தளர்வுக்குப்பின், தேர்ச்சி பெற்ற அனைத்து தேர்வர்களுக்கும், மாவட்டங்களில், மார்ச், 12 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. 

முதற்கட்டமாக, இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாளில், தேர்வு பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். பின், பட்டதாரி ஆசிரியருக்கான இரண்டாம் தாளில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடக்கும். சான்றிதழ் சரிபார்க்கும் இடம் மற்றும் தேதி ஆகியவற்றை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 

பதிவு எண்களை பதிவு செய்து, அழைப்பு கடிதத்தை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கடந்த ஜனவரியில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்களும், கலந்து கொண்டு, சான்றிதழ் சமர்ப்பிக்க தவறியவர்களும், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. முதல்வர் அளித்த சலுகையால், 47 ஆயிரம் பேர், கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Comments

Popular posts from this blog