முதுநிலை பட்டதாரிகளுக்கு இன்று ஆன்லைன் கவுன்சலிங் 

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுநிலை பட்டதாரி போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆன்லைன் மூலம் இன்று கவுன்சலிங் நடத்தி பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன.அரசு மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு போட்டித் தேர்வு நடத்தியது. 

இதில், தேர்ச்சி பெற்ற 593 பேருக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அலுவலகங்களில் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைன் மூலம் கவுன்சலிங் நடக்கிறது. தேர்ச்சி பெற்ற முதுநிலை பட்டதாரிகள் தாங்கள் விரும்பிய இடங்களை ஆன்லைன் மூலம் நேரடியாக தெரிவு செய்யலாம்.

கவுன்சலிங் 
ஆசிரியர் தேர்வு வாரிய வரிசை எண் அடிப்படையில் நடத்தப்படும். முதலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான கவுன்சலிங்கும், பின்னர் வேறு மாவட்டங்களில் பணி புரிய விரும்புவோருக்கான கவுன்சலிங்கும் நடக்கும்.

 தமிழ்ப்பாட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் தங்களின் முகவரியில் தெரிவித்துள்ள மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு ஹால்டிக்கெட், கல்விச் சான்று மற்றும் இதர சான்றுகளுடன் கலந்து கொள்ள வேண்டும். 

இது தவிர பள்ளிக் கல்வித்துறையில் இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்களாக பணியாற்றியவர்களுக்கு உதவியாளர் பதவி உயர்வு வழங்கும் கவுன்சலிங் நேற்று நடந்தது. பள்ளிக் கல்வி இணைய தளத்தில் நேரடியாக நடந்த இந்த பதவி உயர்வு கவுன்சலிங்கில் 145 பேர் உதவியாளர்களாக பதவி உயர்வு நியமன ஆணைகள் பெற்றனர்.

Comments

Popular posts from this blog