ஓராண்டு மட்டுமே படித்து இரட்டைப்பட்டம் பெற்றவர்,TET தேர்வு எழுத முடியாது.

"ஓராண்டு காலம் கொண்ட, "டபிள் டிகிரி' படிப்பை வைத்து, பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியாது; ஆசிரியர் தகுதி தேர்வில் கலந்து கொள்ள முடியாது என்பது சரியே' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 இளங்கலை பட்டம்பெற்றவர்கள், "டபுள் டிகிரி' படிப்பு மூலம், ஓராண்டு காலத்தில், பட்டங்களை பெற்று, ஆசிரியர்பணி மற்றும் பதவி உயர்வு பெற்று வந்தனர். இதனால், மூன்று ஆண்டு படிப்பு முடித்தவர்களுக்கு, வேலை வாய்ப்பு, பதவி உயர்வு கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டது.இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த,தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி சத்திய நாராயணன் அடங்கிய, "முதல் பெஞ்ச்' மேற்கண்டஉத்தரவை பிறப்பித்தது.

Comments

Popular posts from this blog