"டிட்டோஜாக்': மார்ச் 6ல் ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு லட்சம் ஆசிரியர்கள் 'ஸ்டிரைக்'.

மார்ச் 6 ல் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு லட்சம் பேர், வகுப்புகளை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபடப்போவதாகஅறிவித்துள்ளனர். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம்,புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உட்பட ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி,தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர், பிப்., 25, 26 ல் போராட்டம்நடத்தினர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, "டிட்டோஜாக்' அமைப்பினரும், மார்ச் 6ல், போராட்டம் அறிவித்துள்ளனர். இதில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் தமிழ்நாடு தொடக்க மற்றும் நடுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கங்களை (டிட்டோஜாக்) சேர்ந்த, ஒரு லட்சம் பேர் பங்கேற்கின்றனர். 

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டசெயலாளர் முருகன் கூறுகையில், ""மதுரை மாவட்டத்தில் 3,000 ஆசிரியர்கள்வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். எங்கள் கோரிக்கை குறித்து, கல்வி அதிகாரிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடந்தும் உடன்பாடு எட்டவில்லை. 

இதனால்,வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். ஏற்கனவே தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள்மீது கல்வித் துறை எடுத்த நடவடிக்கைகளையும் வாபஸ்பெற வேண்டும்,'' என்றார்.

Comments

Popular posts from this blog