குரூப்-2-ஏ தேர்வுக்கான துணை அறிவிப்பு.
577 பணியிடங்களை நிரப்ப குரூப்-2-ஏ தேர்வுக்கான துணை அறிவிப்பை டிஎன்பிஎஸ்சிவெளியிட்டு இருக்கிறது. புதியவர்கள் விண்ணப்பிக்க ஏப்ரல் 30-ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி கால அவகாசம் வழங்கியுள்ளது.
குரூப்-2-ஏ பணிகளில் மேலும் 577 காலியிடங்கள் சேர்க்கப் பட்டுள்ளன. புதியவர்கள் விண்ணப்பிக்க ஏப்ரல் 30-ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி கால அவகாசம் வழங்கியுள்ளது.
பள்ளிக் கல்வி, போக்குவரத்து, பத்திரப்பதிவு,போலீஸ், வணிகவரி, தொழிலாளர் நலன் உள்பட அரசின் பல்வேறு துறை களில் உதவியாளர் பணியிடங் களையும், சட்டசபை கீழ்நிலை எழுத்தர், டிஎன்பிஎஸ்சி உதவி யாளர் உள்ளிட்ட பணியிடங்களையும் நிரப்புவதற்காக குரூப்-2-ஏ தேர்வு நடத்தப்படுகிறது. இந்த பதவிகள் அனைத்தும் நேர்முகத்தேர்வு அல்லாத பணி யிடங்களாக கருதப்படுகின்றன. இந்தநிலையில் மேற்கண்ட பதவிகளில் 2,269 காலியிடங் களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு ஆன்லைனில் விண்ணப் பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 5-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதற்கிடையே, தேர்தல் காரணமாக மே 18-ம் தேதி நடத்தப்பட இருந்த தேர்வு, ஜூன் 29-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. புதிதாக 577 பணியிடங்கள் சேர்ப்பு இந்த நிலையில், கணக்கு கருவூலத்துறையில் 469 கணக்கர் பணியிடங்களையும், வனத்துறையில் 108 உதவியாளர் இடங்களையும் (மொத்தம் 577) நிரப்ப குரூப்-2-ஏ தேர்வுக்கான துணை அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு இருக்கிறது. தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி ஏதாவது பட்டப் படிப்பு என்ற போதிலும் கருவூல கணக்காளர் பணிக்கு பி.காம். பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஏற்கெனவே குரூப்-2-ஏ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இந்த பணிக்கென புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை. புதியவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். ஏப்.30 கடைசி நாள் ஆன்லைனில் ( www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 30-ம் தேதி ஆகும். விண்ணப்பம் மற்றும் பதிவு கட்டணம், தேர்வுகட்டணம் ஆகியவற்றை மே 2-ம் தேதி வரை வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் செலான் மூலம் செலுத்தலாம் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் அறிவித்துள்ளார்.
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment