இட ஒதுக்கீடு பிரிவில் 5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி வருகிற 6–ந் தேதி தொடங்குகிறது.
இட ஒதுக்கீடு பிரிவில் 5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி திருச்சியில் வருகிற 6–ந் தேதி தொடங்குகிறது.
5 சதவீத மதிப்பெண் சலுகை
ஆசிரியர் தகுதி தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என்பதில் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு5 சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்கப்படும் எனவும், இந்தசலுகை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும் எனவும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த பிப்ரவரி மாதம் சட்டசபையில்அறிவித்தார். இதனால் ஆசிரியர் தகுதி தேர்வில் 150–க்கு 82 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாகும் வாய்ப்பு உருவானது.ஆசிரியர் தகுதி தேர்வில் 90 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்ற இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டன. இந்த நிலையில் 5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பின் 82 முதல் 89 மதிப்பெண்கள் எடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் 5 மையங்களில் கடந்த மார்ச் மாதம் நடந்தது. திருச்சியில் ஜங்ஷன் அருகே வாசவி வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது.
பட்டதாரி ஆசிரியர்கள்
இந்த நிலையில் 5 சதவீதம் மதிப்பெண் சலுகை பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வருகிற 6–ந் தேதி தொடங்குகிறது.
இது குறித்து திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செல்வக்குமார் கூறுகையில், ‘‘5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி மே மாதம் 6–ந் தேதி தொடங்குகிறது. திருச்சியில் வாசவி வித்யாலாய பள்ளியில் இந்த பணி நடைபெற உள்ளது.இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 1,086 பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட உள்ளது. மே 12–ந் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடையும்’’ என்றார்.
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment