ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள் இன்று வெயிட்டேஜ் சம்மந்தமான வழக்கு விசாரணை நடைபெற்றது. 

அரசு தரப்பில் ஆஜரான அட்வகெட் ஜெனரல் பிற மாநிலங்களில் பின்பற்றிவரும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ஆராய்ந்த பின்னரெ தமிழகத்திலும் அதற்கென அமைக்கப்பட்ட குழு இந்த வெயிட்டேஜ் மதிப்பெண் முறையினை பரிந்துரைத்தது. எனவே இது சரியானதுதான் என வாதிட்டார். 

நீதியரசர் நாகமுத்து இம்முறையில் தேர்வர்கள் பெற்ற தகுதித் தேர்வு மதிப்பெண்களுக்கும் வெயிட்டேஜ் முறைமூலம் பெறும் மதிப்பெண்களுக்கும் நேர்விகித தொடர்பு உள்ளதா? என வினா எழுப்பியதாக தகவல் தெரிவிக்கின்றன. 

வழக்கு விசாரணை நாளைக்கு (17.04.04) ஒத்திவைக்கப்பட்டுள்ளது இவ்வழக்கின் தீர்ப்பு விரைவில் வழங்கப்படக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆசிரியர் தகுதித் தேர்வு 2012. 5 சதவீத வழக்கு விசாராணை இன்று நடைபெறவில்லை அவ் வழக்கும் நாளைக்கு (17.04.04) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog