ஆங்கில வழிக்கல்வி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ள அரசுப் பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க கோரிக்கை ஆங்கில வழிக்கல்வி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ள அரசு பள்ளிகளில், கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என பள்ளிகளின் சார்பில் தொடக்கக் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி முறையை, பள்ளி கல்வித்துறை கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தியது. ஆங்கில வழிக்கல்வி முறையால், ஏராளமான அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளுக்கு பள்ளி ஆசிரியர்களைக்கொண்டு தற்காலிகமாக பாடம் நடத்தப்பட்டது. ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வின்அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது மேலும் சில பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்வி முறையை அமல்படுத்த பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. புதிதாக ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் துவக்கப்படவுள்ளபள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உடுமலை மற்றும் சுற்றுப் பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. மாணவர் சேர்க்கை அதிகம் உள்ள பள்ளிகளுக்கு, அதிலும் பள்ளிகளில் முதல் வகுப்புகளில் மட்டுமே ஆங்கில வழியில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் 11 பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் துவங்கப்பட்டது.இம்முறை எவ்வித விதிமுறைகளும் இல்லை, விருப்பமுள்ள பள்ளிகள் எந்த வகுப்புகளிலும் ஆங்கில வழிக் கல்வி முறையினை துவங்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.இதனால் ஏராளமான பள்ளிகள் இந்த கல்வி முறையினை துவங்க முயற்சித்து வருகின்றன. பள்ளிகளில் கடந்த கல்வி ஆண்டில் செயல்பட்ட வகுப்புகளுக்கு மட்டுமே போதிய ஆசிரியர்கள் உள்ளனர். ஆங்கில வழி வகுப்புகள் துவங்க உள்ள பள்ளிகளுக்கு, கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என பள்ளிகள் சார்பில் பள்ளி கல்வித் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் மணி கூறியதாவது: கடந்தாண்டு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி முறை பல பள்ளிகளில் துவங்கப்பட்டது.இந்தாண்டும் எவ்வித கட்டுபாடுமின்றிபல பள்ளிகளில் ஆங்கில வகுப்புகள் துவங்கப்பட உள்ளன. கடந்தாண்டு ஆங்கில வழிக் கல்வி துவக்கப்பட்ட பள்ளிகளில், காலி பணியிடங்களுக்குஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்தாண்டு ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் துவக்க உள்ள பள்ளிகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். குறிப்பாக ஆங்கில வழியில் கல்வி கற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் கூடுதல் பயனளிக்கும்.ஆசிரியர் பற்றாக்குறை இருந்தால், புதிய வகுப்புகள் துவங்கியும் பயனின்றி போகும். இதுகுறித்து பள்ளி கல்வி துறைக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.உடுமலைஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் கிருஷ்ணன் கூறுகையில்,''கடந்தாண்டு ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்தாண்டு, ஏராளமான பள்ளிகள் ஆங்கில வழிக்கல்வி வகுப்புகள் துவங்க உள்ளதால், ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்,'' என்றார்.

Comments

Popular posts from this blog