சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவை 2 வாரத்தில் வெளியிட ஏற்பாடு, ‘கீ ஆன்சர்’ அடுத்த வாரம் வெளியாகும்- The Hindu 

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவை 2 வாரங்களில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. பார்வை இல்லாத மற்றும் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி பி.எட். பட்டதாரிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு தமிழகம் முழுவதும் 39 மையங்களில் புதன்கிழமை நடந்தது. 

தேர்வுக்கு விண்ணப்பித்த 4,694 பேரில் 4,476 பேர் தேர்வு எழுத வந்திருந்தனர். இவர்களில் 3,301 பேர் உடல் ஊனமுற்றவர்கள். எஞ்சிய 1,175 பேர் பார்வையற்ற வர்கள். அவர்களின் உதவியா ளர்கள் கேள்வியைப் படித்து சொன்னார்கள். பார்வையற்ற வர்கள் தெரிவிக்கும் பதில்களை உதவியாளர்கள் விடைத்தாளில் குறித்தனர். தேர்வு நேரம் அதிகரிப்பு சென்னையில் திருவல்லிக் கேணி லேடி வெலிங்டன் அரசு மேல்நிலைப் பள்ளி, என்கேடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சேத்துப்பட்டு சென்னை கிறிஸ்த வக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 6 மையங்களில் 488 பேர் தேர்வெழுதினர். 

இந்த மையங்க ளில் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் விபு நய்யார், உறுப்பினர் கே.அறிவொளி ஆகியோர் நேரில் சென்று ஆய்வுசெய்தனர். வழக்கமான ஆசிரியர் தகுதித்தேர்வு நேரத்தை காட்டிலும் (3 மணி நேரம்) மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தகுதித்தேர்வு என்பதால், இத்தேர்வுக்கு கூடுதலாக 1 மணி நேரம் அளிக்கப்பட்டது. அதோடு, அனைத்து தேர்வர்களுக்கும் தேர்வு மையங்களில் தரை தளங்களிலேயே தேர்வறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதனால். உடல் ஊனமுற்ற, பார்வையில்லாத ஆசிரியர்கள் தங்கள் தேர்வறைக்கு எளிதாக செல்ல முடிந்தது. 

2 வாரத்தில் தேர்வு முடிவு தேர்வு முடிவு குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் மதிப்பீட்டு பணிகளை விரைந்து முடித்துவிட முடியும். தேர்வுக்கான கீ ஆன்சர் (விடைக்குறிப்பு) அடுத்த வாரம் வெளியிடப்படும். அதுதொடர்பாக ஏதேனும் விளக்கம் அளிக்க ஒரு வாரம் காலஅவகாசம் கொடுக்கப்படும். எனவே, 2 வாரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog