தற்காலிக ஆசிரியர்கள் பணி மீண்டும் 5ஆண்டுகள் நீட்டிப்பு அரசு பள்ளிகளில் பணி யாற்றும் தற்காலிக பட்ட தாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை, மேலும் 5 ஆண்டுகளுக்கு, பணி நீட்டிப்பு செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் , 2008 – 09, 2009 – 10 ஆகிய கல்வி ஆண்டுகளில், தரம் உயர்ந்த உயர், மேல் நிலை பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்கள் 790 பேர் நியமிக்கப்பட்டனர் . இவர்களுக்கு, 2013 டிச., வரை பணியை அரசு நீட்டித்திருந்தது. 2014 ஜன., முதல் மேலும் 5 ஆண்டுகளுக்கு, தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்குவது குறித்த கருத்துரு, அரசுக்கு அனுப்பப்பட்டு, பரிசீலனையில் உள்ளது. பள்ளி கல்வி இயக்குனர் மூலம், ஏற்கனேவ கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை சம்பளம் வழங்க, உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், அவர்களுக்குரிய பணி நீட்டிப்பு, காலதாமதமாவதால், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான சம்பளத்தை வழங்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

Comments

Popular posts from this blog