பள்ளிக்கல்வி முதன்மை செயலர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் டி.இ.டி வெயிட்டேஜ் மதிப்பெண்கள் சார்பாக விவாதிக்கப்பட்டதாகவும், விரைவில் புதிய வெயிட்டேஜ் கணக்கீடு வர வாய்ப்பு பள்ளிக் கல்வி முதன்மை செயலர் தலைமையில் முக்கிய விவாதம் நடைபெற்றது, இதில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் குறித்தும், பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்கள் குறித்தும்,ஆசிரியர் நியமனம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக அனைத்து சி இ ஓக்களிடம் அலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் எவ்வகையான வெயிட்டேஜ் முறையினை என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது, இதுகுறித்து நாளையும் நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் டி இ டி தொடர்பான அரசாணை ஓரிரு நாளில் வெளியிடப்பட்டு அடுத்த 10நாட்களுக்குள்இறுதிப்பட்டியல்வெளியடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த திங்கள் அன்று டி.இ.டி எழுதிய ஒரு சாரார் தலைமை செயலகத்தில் தேர்வில் 90மதிப்பெண் மேல் பெற்றவர்கள் மனு அளித்ததும் அது குறித்து 17ம் தேதி அன்று நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று உறுதி அளித்ததும் நினைவிருக்கலாம்.
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment