பகுதிநேர பள்ளி ஆசிரியர்களை முழுநேர பணியமர்த்த கோரிக்கை -தின மலர் நாளிதழ் பகுதிநேர ஆசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக பணியமர்த்த முதல்வர் ஆணையிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் சங்க மாவட்ட இணைச் செயலாளர் ராதா விடுத்துள்ள அறிக்கை : தமிழக முதல்வர் ஜெ., இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 16 ஆயிரத்து 549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களை பணி நியமன ஆணை வழங்கினார். பகுதி நேர ஆசிரியர்கள் தேர்தல் பணிகளை செம்மையாக செய்தோம். லோக்சபா தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். பகுதி நேர ஆசிரியர்களை பல தலைமை ஆசிரியர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்து முழுநேர பணி செய்ய வலியுறுத்துகின்றனர். மாத சம்பளம் 5 ஆயிரம் ரூபாயை போக்குவரத்துக்கே செலவிடுகிறோம். இதனால் குடும்பங்கள் வறுமையில் வாடிவருகிறது. முதன்மை பாடங்களை கவனிப்பதற்கு ஏதுவான நிலை ஏற்படும் என்று தான் சிறப்பு ஆசிரியர்களை அரசு நியமனம் செய்தது. மாணவர்களின் நலன் கருதியும் பகுதிநேர ஆசிரியர்களின் நலன் கருதியும் எங்களை முழுநேர ஆசிரியர்களாக பணியமர்த்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராதா கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog