2,846 காலி பணியிடங்களை நிரப்ப29ம் தேதி குரூப் 2 போட்டி தேர்வு
சென்னை:தமிழக அரசின், பல துறைகளில், குரூப் 2 நிலையில் காலியாக உள்ள, 2,846 இடங்களை நிரப்ப, வரும், 29ம் தேதி போட்டி தேர்வு நடக்கிறது.தகுதியான தேர்வர்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) இணையதளத்தில், நேற்று, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷோபனா வெளியிட்ட அறிவிப்பு: வரும், 29ம் தேதி காலை, 'குரூப் 2ஏ' (நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடங்கள்) தேர்வு நடக்கிறது. 2,846 பணியிடங்களை நிரப்ப, இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதை, 6.25 லட்சம் பேர் எழுத உள்ளனர்.
தகுதிவாய்ந்த தேர்வர்களுக்கு, தேர்வாணைய இணையதளத்தில், ( www.tnpsc.gov.in) ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர் பட்டியலும், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. 'ஹால் டிக்கெட்' கிடைக்காத விண்ணப்பதாரர், நிராகரிப்பு பட்டியலில், தங்களின் பெயர் உள்ளதா என பார்க்க வேண்டும்.உரிய தகுதியுடன், சரியான முறையில் விண்ணப்பித்து, உரிய தேர்வு கட்டணத்தை செலுத்தியும், 'ஹால் டிக்கெட்' கிடைக்கவில்லை எனில், contacttnpsc@ gmail.com என்ற, இமெயிலுக்கு, உரிய விவரங்களுடன் தெரிவிக்கலாம்.இவ்வாறு, ஷோபனா தெரிவித்துள்ளார். தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில், 943 பேரின் விண்ணப்பங்கள், அதிக வயது உள்ளிட்ட, பல காரணங்களால், நிராகரிக்கப்பட்டுள்ளன.
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment