குரூப் 1 தேர்வு வழக்கு: 83 பேர் நியமனம் ரத்து ஏன்? தமிழகத்தில் குரூப் - 1 அதிகாரிகள் 83 பேர் தேர்வு செய்யப்பட்டதை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2005-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் -1 தேர்வு நடத்தியது. போலீஸ் டிஎஸ்பி, துணை ஆட்சியர், வணிக வரித்துறை அதிகாரி, கூட்டுறவு துணைப் பதிவாளர் உள்ளிட்ட பதவிகள் அடங்கிய 91 காலியிடங்களுக்கு இத்தேர்வு நடந்தது. இதில் 83 பேர் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டனர். 2001-ம் நடந்த தேர்வில் பங்கேற்றவர்களில் 91 பேர் பல்வேறு பணிகளுக்கு தேர்தெடுக்கப்பட்டனர். அவர் களில் 24 பேர் துணை ஆட்சி யர்களாகவும், 20 பேர் டி.எஸ்.பி.க்களாகவும், 10 பேர் வணிக வரித் துறை அதிகாரிகளாகவும், 33 பேர் கூட்டுறவு துணைப் பதிவாளராகவும் பல பணிகளில் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த 91 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்யக் கோரிதேர்ச்சி பெறாதவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது ஏ.பி.நடராஜன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுக்களை உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி 2009-ம் ஆண்டில் தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. "இத்தேர்வு முறையில் முறைகேடு நடந்துள்ளது. விண்ணப்ப நிபந்தனைகளை தேர்ச்சி பெற்றவர்கள் மீறியுள்ளதால் அவர்களது தேர்வை ரத்து செய்ய வேண்டும்" என்று மனுதாரர்கள் கோரினர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எலிபி தர்மாராவ், ஹரிபரந்தாமன் ஆகியோர் கொண்ட அமர்வு, 83 பேர் குரூப்– 1 அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்து 2011-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே, தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கப்பட்டு பல்வேறு பணிகளில் அமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டு, தமிழக அரசின் முக்கியப் பதவிகளில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அனித் தவே, விக்ரம்ஜித் சென் ஆகியோர், குரூப் – 1 அதிகாரிகள் 83 பேர் தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியே என்று திங்கள்கிழமை தீர்ப்பளித்தனர். குரூப் 1 தேர்வு வழக்கு: 83 பேர் நியமனம் ரத்து ஏன்?83 பேர் டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகளாக தேர்வு செய்ததில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக நடராஜன் தனது மனுவில் கூறியிருந்தார். டி.என்.பி.எஸ்.சி. தேர்வு விதிமுறைகளுக்கு மாறாக விடைத்தாளில் ஸ்கெட்ச் பேனா மற்றும் பென்சில் பயன்படுத்தியது, இரண்டு வண்ண மைகளைப் பயன்படுத்தியது, சில வழிபாட்டுச் சின்னங்களை விடைத்தாளில் எழுதி வைத்தது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டன. இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களில் எஸ்.விசாகன், சி.சியாமளாதேவி, ஆர்.பாண்டியராஜன், கே.கிங்ஸ்லின், கே.பிரபாகர், டி.பத்மாவதி, எம்.ஜெயராமன் மற்றும் கே.வரதராஜன் ஆகிய 8 பேர் தவிர மற்ற 83 பேரின் பணி நியமனம் செல்லாது என்று கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பினை இப்போது உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. வெளிப்படைத் தன்மை வேண்டும்: இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞரான மணிகண்டன் வதன், டி.என்.பி.எஸ்.சி. பணி நியமனங்களில் நடைபெறும் பல குளறுபடிகளும், வெளிப் படைத்தன்மை இல்லாததும்தான் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு காரணம். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்குப் பிறகாவது பணி நியமனங்களில் முழுமையான வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர டி.என்.பி.எஸ்.சி. நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் மணிகண்டன்

Comments

Popular posts from this blog