தமிழகத்தில் சமச்சீர் கல்விமுறை முறையாக அமலாகவில்லை பாலபாரதி குற்றச்சாட்டு 

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழகத்தில் சமச்சீர்கல்வி முறை முறையாக அமலாகவில்லை என்று சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத்தலைவர் கே.பாலபாரதி வலியுறுத்தினார். வியாழனன்று பேரவையில் பள்ளிக்கல்வி, உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கைள் மீதான விவாதத்திற்கு அமைச்சர்கள் பதில் அளித்த பின்னர் இதனை அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசியதாவது: ஆசிரியர் தகுதித்தேர்வில் 38ஆயிரம் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 10ஆயிரம் பேரைத்தான் அரசுதேர்வு செய்ய உள்ளது. அவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஆனால் இந்த வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்கு பிளஸ்டு மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது. பட்டப்படிப்பு, ஆசிரியர் பயிற்சி படிப்பு, வேலைவாய்ப்பு அலுவலகபதிவு மூப்பு, தனியார் பள்ளியில் பணி புரிந்திருந்தால் அந்த அனுபவம், ராணுவ வீரர்களின் வாரிசுகள், உடல் ஊனமுற்றோர் என்ற சமூக பார்வையில் வெயிட்டேஜ் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட வேண்டும். இப்படி செய்தால்தான் அது உண்மையான தேர்வாக இருக்க முடியும் என்றும் அவர் கூறினார்

Comments

Popular posts from this blog