எள்ளளவு பயன் உண்டா? 

18,000ஆசிரியர்கள்இன்னும்15நாட்களில்நிரப்பப்படும்-பள்ளிக்கல்வி அமைச்சர்கே.சிவீரமணி. 20,000ஆசிரியர்கள்இன்னும்15நாட்களில்நிரப்பப்படும்-தினத்தந்தி போன்றவைபலர்வயிற்றில்பால்வார்த்தசெய்திகள். 


ஆனால்அடுத்தஇருதினங்களிலேயே 10762 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான விளம்பரம் வெளியாகி பலர் வயிற்றில் புளியைகரைத்தது.இதற்கு விதிவிலக்கு வரலாறும் புவியியலும். மற்றத் துறைகளான தமிழ், கணிதம் மற்றும் அறிவியலின் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்கள் பெருஞ்சோர்விற்கு ஆளாகினார்கள். 

தாள்1க்கான காலிப்பணியிட விவரம் இன்னும்வெளியாகததால்அவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடனும் பயத்துடனும்காத்துக்கொண்டிருக்கின்றனர். தாள்1க்கான காலிப்பணியிட விவரம் வெளியிடுவதில் ஏதோசிக்கல் இருப்பதாக தெரிகிறது. மாநில பதிவு மூப்பு பயன்படுத்தப்படுமா அல்லது TRB அறிவித்தபடி weightage முறையைமையமாகக் கொண்டுபணிநியமனம் செய்யப்படுமா என்பதில் சிக்கல் இருக்கலாம். 

தாள்1க்கான வழக்கு நிலவரம் குறித்து எதுவும் நம் கவனத்திற்கு வருவதில்லை. எதுவானாலும் விரைவில் தெரியவரும். இன்றைய நாள் கல்வி மானியக் கோரிக்கை வருவதை யொட்டி காலை முதல் மாலை வரை ஒவ்வொரு நிமிடமும் வருங்கால ஆசிரியர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கல்விமானியக் கோரிக்கையில் ஏதேனும் காலிப்பணியிடம் அறிவிக்கப் படமாட்டாதா?

ஏதேனும்அதிர்ஷ்டதேவியின்கடைக்கண்பார்வைவிழாதா?என்பதுபோன்றஏக்கம். இறுதியாக ஜெயாபிளஸ் தொலைக்காட்சி 3459 ஆசிரியப் பணியிடங்கள்2014-2015 ஆம் கல்வியாண்டில் நிரப்பப்படும் என்று வெளியாகி ஒருசிறுபுன் முறுவலை நம் மத்தியில்உண்டாக்கியுள்ளது. இப்பொழுது நடைபெறுவது தான்2014-2015 கல்வியாண்டு. எனவே இந்த 3459 காலிப்பணியிடங்களும் நம்மைக் கொண்டு  தான் நிரப்பப்படும். அவ்வாறு நிரப்பவில்லையென்றால் TRBகுறிப்பிடும் தகுதியான ஆசிரியர்கள் கையிலிருந்தும்( நாம்தான்) இந்தகல்வியாண்டு முழுவதும்ஆசிரியர் இல்லா பள்ளிகளாகவே அரசுபள்ளிக இயங்கும். 

இந்த 3459 காலிப் பணியிடங்களில்தாள்1, 2 மற்றும் PGக்கு எவ்வளவு பணியிடங்கள் என்பதும் தாள்2, PGயில்பாடவாரியாக எத்தனை காலிப்பணியிடங்கள் என்பதும் அமைச்சர்கே.சிவீரமணி அவர்களுக்கும், இறைவனுக்கும் மட்டுமே அறிந்தரகசியம். 

இதுபோக சென்னை, கோவை, மதுரை போன்ற மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ்இயங்கும் பள்ளிகள், ஆதிதிராவிட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின சீர்திருத்த வாரியத்தின்கீழ் இயங்கும் பள்ளிகளின் காலிப்பணியிட மும்நம்மைக் கொண்டே நிரப்பப்படும் என்றாலும் இத்துறைகளின் கீழ்எத்தனை பள்ளிகள் இயங்குகின்றன ,அவற்றில் எத்தனை காலிப்பணியிடங்கள் உள்ளது என்பதும் ஊமையன் அறிந்த ரகசியம் அரசியல்வாதிகள். 

நாடாளுமன்றத்தேர்தல்வருகின்றதுஎன்றகாரணத்திற்காக5%தளர்வுவழங்கவேண்டும்என்றுஅத்தனைகூப்பாடுபோட்டஅரசியல்வாதிகள்,அவர்கள்வாதிட்டஅதே5%தளர்வினால்தேர்ச்சிப்பெற்றோருக்குஇப்போதையநிலவரப்படிஎள்முனையளவுகூடபுவியியலைத்தவிர(விரல்விட்டுஎன்னும்எண்ணிக்கையில்மட்டுமேபயன்)மற்றத்துறையினருக்குபயனில்லைஎன்பதைஅறிந்தார்களா?அல்லதுஅதைஅறிந்தும்அவர்களும்உண்மையிலேயேபயனடையவேண்டும்என்றநோக்கில்ஏதாவதுகுரல்கொடுத்தார்களா?இன்றுநடைபெறுவதுகல்விமானியக்கோரிக்கைஇதனுடையநோக்கமேஅரசுப்பள்ளிகளில்உள்ளகாலிப்பணியிடங்களைநிரப்புவதும்பள்ளிகளைதரம்உயர்த்துவதுமேஎன்றுதெரிந்தும்எல்லோரும்எல்லாவற்றையும்மறந்துபோனார்கள்.ஒருவர்கூடஆசிரியர்அல்லதுஅரசுப்பள்ளிஎன்றவார்த்தையைஉச்சரிக்கவில்லை.ஏனென்றால்அடுத்தத்தேர்தலுக்குஇன்னும்2ஆண்டுகள்இருக்கிறதே! அன்புடன்மணியரசன். Thanks to Kalviseithi

Comments

Popular posts from this blog