கடலூரில் குரூப்–2 தேர்வை ரத்து செய்ய கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் குரூப்–2 தேர்வு கடந்த 29–ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை ஏராளமானபேர் எழுதினார்கள். கடலூர் திருவந்திபுரத்தில் தேர்வு எழுதிய ஒருவர் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்தபோது திருப்பாதிரிபுலியூர் ரெயில் நிலையம் அருகே ஒரு துண்டு சீட்டு கிடந்ததை கண்டுபிடித்தார். அதில் குரூப்–2 தேர்வு வினாக்களுக்குரிய விடைகள் இருந்தன. அதைப்பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். தேர்வு முடிந்த சிறிது நேரத்தில் விடைகள் எழுதப்பட்ட தாள் கிடந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து கடலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அவர்கள் தேர்வாணையத்துக்கு தகவல் தெரிவித்தனர். வினாத்தாள் அவுட் ஆனதா? என்று அவர்கள் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூரில் குரூப்–2 தேர்வு எழுதிய மாணவர்கள் 100 பேர் இன்று காலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். 'ரத்து செய், ரத்து செய் குரூப்–2 தேர்வை ரத்து செய்' என்று கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் மாவட்ட வருவாய் அதிகாரி மனோகரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் குறிப்பிட்டிருந்ததாவது:– கடந்த 29–ந் தேதி நடைபெற்ற குரூப்–2 தேர்வு வினாத்தாள் அவுட் ஆனதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். கடந்த 2012–ம் ஆண்டு இதேபோல் குரூப்–2 தேர்வு வினாக்களுக்குரிய விடைத்தாள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதேபோல் கடந்த 29–ந் தேதி நடைபெற்ற குரூப்–2 தேர்வையும் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது

Comments

Popular posts from this blog