கணினி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரிக்கை. "அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் மாணவர்களிடையே கம்ப்யூட்டர் கல்வியில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு துவக்கப்பட்டது. இதற்காக கம்ப்யூட்டர் லேப் அமைக்கப்பட்டு எல்காட் மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.அனைத்து பள்ளிகளிலும் கம்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்ட பின் சிறப்பு தேர்வு வைத்து ஏற்கனவே தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வந்த ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டனர். இதில் சிறப்பு தேர்வில் தேர்ச்சி பெறாமல், விலக்கு அளித்து பணி நிரந்தரம் செய்யப்பட்ட 600க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர்களை கடந்த சில மாதங்களுக்கு முன் நீதிமன்றம் பணி நீக்கம் செய்தது.இதனால் பாதிக்கும் மேற்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு நடத்துவதற்கு ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது. ஒரு கம்ப்யூட்டர் ஆசிரியர்கள், அருகில் உள்ள பள்ளிகளுக்கு சப்ஸ்டிட்யூட் முறையில் பாடம் நடத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால், கடந்த ஆண்டே மாணவ, மாணவியர் அவதிக்குள்ளாகினர்.கல்வியாண்டு துவங்கிய நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கான ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில், கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி நியமனத்துக்கான நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: பொதுவாக ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரே ஒரு கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடம் மட்டுமே உள்ளது. அதுவும் பல பள்ளிகளில் இல்லாததால், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்கள் தடுமாற வேண்டியுள்ளது.அதுமட்டுமில்லாமல் உயர்நிலைப்பள்ளி உள்பட அனைத்து பள்ளிகளிலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது. ஏனெனில், கல்வித்துறை சார்பில் கடிதம், விவரம் சேகரிப்பு உள்ளிட்ட அனைத்தும் ஆன்லைன் மயமாகிவிட்டது. இதனால் உயர்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துள்ளது.இதனால், உடனடியாக கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments

Popular posts from this blog