முதுகலை ஆசிரியர் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியீடு 

முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல், ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும்' என, டி.ஆர்.பி., வட்டாரம் (ஆசிரியர் தேர்வு வாரியம்), நேற்று தெரிவித்தது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய, கடந்த ஆண்டு, ஜூலையில், போட்டி தேர்வு நடந்தது. 

தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நிலையில், விடைகளை எதிர்த்து, பல தேர்வர்கள், சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் அனைத்தும், சமீபத்தில் முடித்து வைக்கப்பட்டன. இதையடுத்து, ஒரு வாரத்திற்குள், முதுகலை ஆசிரியர், இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று மாலை தெரிவித்தது. 

மொத்தம் உள்ள, 17 பாடங்களில், 6 பாடங்களுக்கு, இறுதி முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழ் பாடத்திற்கு மட்டும், பணி நியமனம் நடந்துள்ளது. 11 பாடங்களுக்கு, இறுதி முடிவு வெளியாகவில்லை. இந்த முடிவு வெளியானதும், 16 பாடங்களுக்கு தேர்வு பெறுவோர், முதுகலை ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவர். 

பள்ளி கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், 'பதவி உயர்வு கலந்தாய்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு என, அனைத்தும் முடிந்து விட்டன. எனவே, தேர்வுப் பட்டியல் வந்ததும், உடனடியாக பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்தது.

Comments

Popular posts from this blog