திட்டு வாங்கும் TRB இன்று challenging key answer தொடர்பான பல்வேறு வழக்குகள் நீதிபதி நாகமுத்து விசாரணைக்கு வந்தது. இதில் தாள் 1 க்கான வழக்குகள்.3 மணி வாக்கில் முதலில் எடுத்துக் கொள்ளப் பட்டன.சைக்காலகி வினாக்களில் ஒரு வினாவிற்கு மதிப்பெண் அளிக்கும் வாய்ப்பு இருந்தது.ஆனால் இனிமேலும் காலதாமதத்தை ஏற்படுத்தக் கூடாது,மீண்டும் குழப்பத்தை உண்டுபண்ணக் கூடாது எனும் நோக்கங்களில் அவ்வினாவிற்கு மதிப்பெண் அளிக்கப் படவில்லை.தாள் 1 ஐ பொறுத்தவரை அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப் பட்டன. தாள் இரண்டை 4.15 வாக்கில் விசாரணைக்கு வந்தது.தாள் இரண்டிற்கு கூடுதலாக 2 மதிப்பெண் வழங்கப் படும் என்றே தெரிகிறது.குறைந்த பட்சம் ஒரு மதிப்பெண்ணாவது ஆங்கில வினா ஒன்றிற்கு வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.ஏனெனினும் நேரமின்மையால் அவ்வினா குறித்து முழுமையான விவாதம் நடை பெறவில்லை. நாளை காலையிலேயே GP அவர்களையும்,வினாக்களுக்கு விளக்கம் அளிக்கும் experts களையும் வார வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வாதங்களின் போது நீதிபதியிடமிருந்து TRB காரர்கள் வாங்கும் வசை இருக்கிறதே அய்யய்யோ.நாம் காதில் தேனாய் வந்து பாய்கிறது.அவர்கள் வசை வாங்குவதற்கு நம்முடைய சாபம்தான் காரணமோ? Source Www.kalviseithi.com

Comments

Popular posts from this blog