முதுநிலை, பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு இறுதி முடிவு வெளியீடு - தினகரன்

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு, பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றின் இறுதி முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. 

அரசு மேனிலைப் பள்ளிகளில் 2012&2013ம் ஆண்டுக்கான காலிப் பணியிடங்களில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், விளையாட்டு கல்வி இயக்குநர் கிரேடு&1 ஆசிரியர்களை நியமிக்க போட்டித் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. கடந்த ஆண்டு ஜூலை 21ம் தேதி போட்டித் தேர்வு நடந்தது. கடந்த அக்டோபர் 7ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. 

அதற்கான கீ&ஆன்சர் மீதுதொடரப்பட்ட வழக்கின் காரணமாக திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் பின்னர் வெளியிடப்பட்டு கடந்த ஜனவரி 17ம் தேதி சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இதையடுத்து, மேற்கண்ட முதுநிலை பட்டதாரி தேர்வில் ஆங்கிலம்(347), கணக்கு(288), வேதியியல்(220), தாவரவியல்(192), வரலாறு(173), நுண்ணுயிரியல்(31) பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்களின் தற்காலிக தேர்வுப் பட்டியலை வெளியிட்டது. 

இந்த பட்டியலில் சிலரின் விவரங்கள் விடுபட்டுள்ளதாகவும், சிலரின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுண்ணுயிரியல் பாடத்தில் மட்டும் 13 பேர் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பி வைத்து நியமனங்கள் வழங்கப்படும். மேலும், பட்டதாரி ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இறுதி முடிவையும் வெளியிட்டுள்ளது. 

பட்டதாரி ஆசிரியர் சான்று சரிபார்ப்பில் பங்கேற்காமல் விடுபட்டவர்களுக்கு கடந்த மாதம் 21ம் தேதி முதல் 26ம் தேதி வரை மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டு சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இதன் பேரில் இறுதி பட்டியல்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

 தேர்ச்சி பெற்றவர்களில் தொடக்க கல்வி துறையில் பணி நியமனம் செய்ய இயற்பியல் 65, வேதியியல் 65, தாவரவியல் 33, விலங்கியல் 32 பேர் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை யின் கீழ் வரும் உயர்நிலைப் பள்ளிகளில் நியமனம் செய்வதற்காக தமிழ் 772, ஆங்கில் 2865, கணக்கு 993, இயற்பியல் 642, வேதியியல் 642, தாவரவியல் 275, விலங்கியல் 275, வரலாறு 3659, புவியியல் 916 பேர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog