காலிப்பணியிடங்கள் மறைப்பு புதிய ஆசிரியர்கள் புலம்பல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் நியமனம் வழங்குவதற்கான 'ஆன் லைன்' கவுன்சிலிங் நேற்று துவங்கியது. இதில் பெரும்பாலான காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அரசுப் பள்ளிகளுக்கு 14 ஆயிரத்து 700 புதிய ஆசிரியர்கள் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஏழு பேருக்கு பணி நியமன உத்தரவை முதல்வர் ஜெ., வழங்கினார். 'மற்றவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் 'ஆன் லைன்' கவுன்சிலிங் மூலம் பணியிடங்கள் ஒதுக்கப்படும்' என அறிவிக்கப்பட்டது. பணியிடங்கள் மறைப்பு : முதுகலை ஆசிரியர்களுக்கு, மாவட்டத்திற்குள் காலியாக உள்ள இடங்களுக்கான கவுன்சிலிங் நேற்று துவங்கியது. இதில் பெரும்பாலான காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டதாக ஆசிரியர்கள் புலம்பினர். பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், 'பள்ளிகளில் பாடவாரியாக காலிப்பணியிடங்கள் விபரம் தெரிவிக்கப்படும் என நம்பினோம். ஆனால் பெரும்பாலான பணியிடங்கள் மறைக்கப்பட்டன. அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான். நாளை (இன்று) வெளிமாவட்ட காலிப்பணியிடங்களுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. அதில் எத்தனை காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டிருக்கும் எனத்தெரியவில்லை. மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் கேட்டால் தெளிவான பதில் இல்லை. வெளிப்படையான பணிநியமன கவுன்சிலிங் நடத்த முதல்வர் ஜெ., உத்தரவிட வேண்டும்' என்றனர்.

Comments

Popular posts from this blog