TET வெயிட்டேஜ் முறைக்கு எதிர்ப்பு: பட்டதாரி ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதம்-puthiyathalaimurai பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள், தகுதித் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். கல்வி முறையில் ஆண்டுதோறும் ஏற்படும் மாற்றம் காரணமாக மதிப்பெண் விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டு வருவதாக பட்டதாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அதனால், தகுதித்தேர்வில் 90க்கும் அதிகமா‌ன மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், வெயிட்டேஜ் மதிப்பெண் காரணமாக பதவி கிடைக்கவில்லை என்றும் அவர்கள் குறை கூறினர். புதிய அரசாணையின்படி, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், 12ம் வகுப்புக்கு 10, பட்டப்படிப்பிற்கு 15, பி.எட் படிப்பிற்கு 15, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 என்கிற ரீதியில் மொத்தம் 100 மதிப்பெண்கள் கணக்கிடப்படுகின்றன. இந்த முறையால், தகுதித்தேர்வில் 90க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், பள்ளி, கல்லூரிகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே பதவி வழங்‌கப்படுகிறது.

Comments

Popular posts from this blog