ஆசிரியர்
நியமனத்தில் weightage முறை மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பாதிப்படைந்த
ஆசிரியர்கள் சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்.
உரிமை பறிபோவதர்க்குள், நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அம்மா
அவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்று, நம் உரிமையை மீட்க அனைவரும்
குடும்பத்துடன் அலைகடலென திரண்டு வாரீர்~வாரீர்.......
காவல்துறை இடம் அனுமதி பெறப்பட்டுவிட்டது.
இடம்:வள்ளுவர்கோட்டம்,சென்னை
நாள்: 18.08.2014 -திங்கள்.
நண்பர்களே,இந்த போராட்டம் நம்வாழ்வில், அரசு ஆசிரியர் பணியை பெறுவதற்க்கான
இறுதி கட்டமுயற்சி.
முக்கிய காரணங்கள்......
GO 71படி, weightage அடிப்படையில் ஆசிரியர் நியமனம்என்பது,முற்றிலும்
ஏற்றதாழ்வுள்ள ஒன்றாகும். எப்போதோ படித்த கல்வியை இப்போதுள்ள கல்விமுறை
மற்றும் மதிப்பெண் உடன் ஒப்பிடுவது நியாயமற்ற முறையாகும்.
முதல் GO வின் படி 90மதிப்பெண் பெற்று,சான்றிதழ் சரிபார்த்து,அடுத்தவாரம்
வேலை கிடைத்துவிடும் என ஆவலுடன் இருந்த வேலையில், 5%மதிப்பெண்தளர்வு என
கூறி 82-89 மதிப்பெண் பெற்றவர்களுக்கு வாய்ப்புதந்தீர்கள்,முதலில் ABOVE 90
எடுத்து CV முடித்த எங்களுக்கு பணிவழங்கிவிட்டு மீதம் இருந்தால்
அவர்களுக்கும் பணிவழங்குங்கள்.
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment