827 கணினி பயிற்றுநர் நியமனத்தற்கான அரசானை வெளியீடு .
652 + 175 = 827 கணினி பயிற்றுநர் நியமனத்திற்கான அரசானை வெளியிடப்பட்டுள்ளது.
அரசானை எண் GO MS NO : 130 DATED 05/09/2104
இந்த பணி நியமனம் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, உரிய தகுதி பெற்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த, பதிவு மூப்பின்படி வழங்கப்படஉள்ளது.
மேலும் இந்த பணி நியமனத்திற்கு உரிய கல்வித்தகுதியுடன் பி.எட். தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் மட்டுமே பரிசீலிக்கப்படுவார்கள்.முன்னதாக இப்பணியிடங்களில் பணிபுரிந்த 652 கணினி பயிற்றுநர்களுக்கு இந்த பணிநியமனத்தில் எவ்வித முன்னுரிமையும் வழங்கப்படமாட்டாது.
மேலும் இனி வரும் காலங்களில் உருவாக்கப்படும் இத்தகைய கணினி ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களை நிரப்புகையில், அரசின் தற்போதைய கொள்கை முடிவின்படி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் உரிய எழுத்துத் தேர்வு வைத்து மட்டுமே நிரப்பப்படுவர்என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment