டி.இ.டி., தேர்வை ரத்து செய்ய வேண்டும் தபாலில் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு "ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்து, பழைய முறையை பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் குண்டு வெடிக்கும்' என, மர்ம நபர் எழுதிய கடிதம், கொல்லிமலை அரசு பள்ளி தலைமையாசிரியருக்கு வந்துள்ளது. இச்சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வாழவந்திநாட்டில், அரசு பழங்குடியினர் உறைவிட மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, சுற்று வட்டாரத்தை சேர்ந்த மலைவாழ் இனத்தை சேர்ந்த, 515க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமையாசிரியராக, கலைவாணி உள்ளார். நேற்று முன்தினம் மதியம், 2 மணிக்கு போஸ்ட்மேன், ஸ்டாம்ப் ஒட்டாத தபால் ஒன்றை, பள்ளி தலைமையாசிரியர் கலைவாணியிடம் கொடுத்துச் சென்றார். அந்த கவரை பிரித்து படித்த அவர், கடும் அதிர்ச்சி அடைந்தார். கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஆசிரியர் தகுதித்தேர்வை (டிஇடி) ரத்து செய்து விட்டு, பழைய முறையை பின்பற்ற வேண்டும். இல்லையென்றால், பள்ளி கட்டிடம், ஓட்டு கேட்க வரும் அரசியல்வாதிகள், சேந்தமங்கலம் தொகுதி அனைத்து கட்சி, எம்.எல்.ஏ.,க்கள், வீடுகளில் வெடிகுண்டு வெடிக்கும். சேந்தமங்கமலம் தீவிரவாதமா? ஆசிரியர் என்றால், தி.மு.க., அரசியல் என்றால் அ.தி.மு.க., டெட் தேர்வில் எஸ்.டி., எத்தனை பேர் வெற்றி பெற்றுள்ளனர். எஸ்.டி.,க்கென ஒரு சீட் கூட இல்லை. எனவே, பழைய தேர்வு முறையை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் எழுதப்பட்டுள்ளது. கையெழுத்து சரியில்லாமலும், அதிக எழுத்துப் பிழையுடனும் மூன்று பக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. இது குறித்து, பள்ளி தலைமையாசிரியர் கலைவாணி, வாழவந்திநாடு போலீஸில் புகார் செய்தார். வாழவந்திநாடு போலீஸார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம், நாமக்கல் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Comments

Popular posts from this blog