ஆசிரியர் பணி நியமனம்: தகுதிகாண் முறையை ரத்து செய்ய கருணாநிதி மீண்டும் வலியுறுத்தல்
ஆசிரியர் பணி நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய
வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியோரில் சுமார் 62 ஆயிரம் பேர் உரிய மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றும்கூட, தகுதிகாண் மதிப்பெண் காரணமாக வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
எனவே, தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து, பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்
தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகளும் தகுதிகாண் முறையை ரத்துச் செய்ய வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளன. எனவே தகுதிகாண் மதிப்பெண் முறையை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment