ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண், பணி அனுபவ மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் அளிக்க வேண்டும்
ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண், பணி அனுபவ மதிப்பெண் அடிப்படையில்பணி நியமனம் அளிக்க வேண்டும் என, ஒருங்கிணைந்த குழந்தைகள்பாதுகாப்புத் திட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய ஆசிரியர்கள்வலியுறுத்தினர்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால்
ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்திங்கள்கிழமை நடைபெறவில்லை. இதையடுத்து மனு அளிக்க வந்தவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில்போட்ட மனு:
தருமபுரி மாவட்டத்தில் யுனிசெப் நிதியுதவியுடன் செயல்பட்டஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் மலைப்பகுதியில் உள்ளஉண்டு உறைவிடப் பள்ளிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் கடந்தஜனவரி 2010-ஆம் ஆண்டு முதல் கடந்தாண்டு மே மாதம் 31-ஆம்தேதி வரையில் 70 பேர் பணியாற்றினோம். உரிய கல்வித் தகுதிகளுடன் நேர்காணல் அடிப்படையில் பணியில் சேர்ந்ததங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென கல்வித்துறை அதிகாரிகள்,யுனிசெப் ஆய்வுக் குழுவினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தங்களது பணி அனுபவத்திற்கு தகுந்த மதிப்பெண்கள் வழங்கி, ஆசிரியர்தகுதித் தேர்வில் தற்போது பின்பற்றப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண்அடிப்படையில் பணியமர்த்தப்படுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு அரசாணை வெளியிடுவதற்கு முன்பே பணியில் சேர்ந்ததால்கருணை அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்ணுடன்,பணி அனுபவத்திற்கு அளிக்கப்படும் மதிப்பெண்ணைக் கணக்கில்கொண்டு ஆசிரியர் பணியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment