புதிய ஆசிரியருக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை இந்த வார இறுதிக்குள் தீர்வு: கல்வித்துறை

 புதிய ஆசிரியர் பணியில் சேர்வதில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு இந்த வாரஇறுதிக்குள் தீர்வு கிடைத்துவிடும்' என கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது. பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறைக்கு தேர்வு பெற்ற 14700 பேரை பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு கடந்த வாரம் நடந்தது. 

இதில் 100 பேர் வரை 'ஆப்சென்ட்' ஆனதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து கல்வித்துறை வட்டாரம் நேற்று கூறுகையில் 'ஆப்சென்ட் ஆனதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சம்பந்தபட்டவர்கள் 'ஆப்சென்ட்' ஆனதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். அவர்கள் அனைவரும் பணியில் சேர வாய்ப்பு அளிக்கப்படும்' என தெரிவித்தது. 

இதற்கிடையே 'வெயிட்டேஜ்' மதிப்பெண் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை புதிய ஆசிரியர் பணியில் சேர இடைக்கால தடை விதித்தது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு மதுரை நீதிமன்றத்தில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிரச்னையில் இந்த வார இறுதிக்குள் தீர்வு கிடைத்து விடும் எனவும் கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.

Comments

Popular posts from this blog