ஆசிரியர் பணி நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்: த.தீ.ஒ.மு. அறிவிப்பு 

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ்நாட்டில் ஜூலை 2012ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. ஜூலை மற்றும் அக்டோபர் 2012ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் காலிப் பணியிடங்களுக்கான அறிவிக்கை மற்றும் தேர்வானவர்கள் பட்டியல் வெளியிடாமலே தேர்வர்களுக்கு வெளிப்படைத்தன்மையில்லாமல் பணி நியமனங்களை ஆசிரியர் தேர்வு வாரியமும் பள்ளிக்கல்வித் துறையும் வழங்கியது. 

குழப்பமான இத்தேர்வு முறையால் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 2012ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் பின்னடவு காலிப் பணியிடங்கள் ஏற்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்கவும் மற்றும் அரசாணை 252 வெயிட்டேஜ் முறையை இரத்து செய்யக் கோரியும் மனு அளித்தது

ஏன் வெயிட்டேஜ் முறையை இரத்து செய்யவேண்டும்? வெயிட்டேஜ் முறையால் கிராமப்புறத்தில் அரசு பள்ளிகளில் படித்த முதல் தலைமுறை மாணவர்கள், மலைகிராமத்தில் ஆசிரியர் இல்லாமல் படிக்க்கும் மாணவர்களுக்கும், ஏழ்மையான சூழலில் எந்தவித வழிகாட்டுதலும் இல்லாமல் பள்ளிக்கல்வி, கல்லூரிக்கல்வி முடித்த மாணவர்களுக்கும் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கல்விச்சூழலில் படித்த மூத்த ஆசிரியர்கள் வெயிட்டேஜ் முறையால் பெரிதும் பாதிப்பு அடைகின்றனர். தற்போது 1200க்கு 1195 பெறும் நிலை உள்ளது. 

2000ஆம் ஆண்டிற்கு முன்பு +2 பாடத்திட்டம் கடினமாக இருந்த்து, அதே போன்று கற்பிக்கும் முறையும் பின்தங்கிய நிலையேலேயே இருந்த்து. தற்போது மதிப்பெண் அதிகமாக பெறவேண்டும் என்பதற்காக சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. +2 வகுப்பில் பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன. இதில் சிலப் பாடப் பிரிவுகளில் (Vocational) செயல்முறைத் தேர்விற்கே சுமார் 400 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. இதனால் கடினமான பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து படித்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறமுடியவில்லை. 

2004ஆம் ஆண்டிற்கு பிறகு ஆங்கில இலக்கியம் படித்த மாணவர்களுக்கு செயல்முறைத் தேர்வுக்கு 400 மதிப்பெண் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன் படித்தவர்களுக்கு எந்தவித செய்லமுறை தேர்வும் இல்லை. பட்டப்படிப்பில் ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும் வெவ்வேறு பாடத்திட்டங்கள் கொண்டுள்ளது. 

சில பல்கலைக்கழகங்களில் எளிதான பாடத்திட்டங்கள் உள்ளன. என்வே அதுபோன்று பல்கலைக்கழகளில் படித்த மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்றிருக்கின்றனர். எனவே வெயிட்டேஜ் மதிப்பெண்னை பின்பற்றும் முறை பாராபட்சமாக இருக்கும். வெயிட்டேஜ் முறையை நீக்கவேண்டி கோரிக்கை +2, பட்டம், கல்வியியல் படிப்பில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் வழங்கும் வெயிட்டேஜ் முறையை இரத்து செய்யவேண்டும். 

வெயிட்டேஜ் முறை அறிவியில்பூர்வமான முறையும் கிடையாது. தமிழக சட்டபேரவையில் பள்ளிக்கல்வித் துறையால் அறிவிக்கப்பட்ட 2012-13ஆம் ஆண்டிற்கான காலிப் பணியிடங்களுக்கும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கும் முரண்பாடு உள்ளது. இது களையப்படவேண்டும். 2013-14ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களையும் ஆகஸ்டு 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களை வைத்து நிரப்பப்ப்டவேண்டும். 

இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு பின்னடவு காலிப் பணியிடங்கள் ஏற்படாதவாறு பணி நியமனம் வழங்கப்படவேண்டும். மாநிலத்தில் உள்ள பல அரசு பள்ளிகளில் ஆசிரியர் இல்லாமல் இருந்து வருகிறது. அதைப்பற்றி எந்தவித அக்கறையும் கொள்ளாமல் தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை நடந்து கொள்கிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் 100 மதிப்பெண்ணிற்கு மேல் எடுத்த போதிலும். இந்த வெயிட்டேஜ் முறையால் +2, பட்டம், கல்வியியல் பட்டப்படிப்பில் சதவீத மதிப்பெண் குறைவாக பெற்றிருந்தால் அவர்கள் எத்தனை முறை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதினாலும் பணி கிடைக்காது என்ற நிலை உள்ளது. 

இந்த வெயிட்டேஜ் முறையால் ஆசிரியர் தகுதித் தேர்வில் குறைந்த தேர்ச்சி மதிப்பெண்ணான 82 பெறுபவர்கள் பணிநியமனம் பெறுகிறார்கள். அறிவிக்கை வெளியிடும்போது உயர்நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து பணி நியமன்ங்கள் செய்யப்படும் என்று அறிவித்து ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு முடிவுகளை அறிவித்தது முற்றிலும் தவறாகும். 

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்து வெயிட்டேஜ் முறையால் வேலை இல்லை என்ற சூழலில் கடந்த ஒரு மாத காலமாக தேர்வர்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று போராடி கொண்டிருப்பவர்களை காவல்துறை தினமும் கைது செய்து சமூக நலக் கூடங்களில் வைத்து மாலையில் விடுவிக்கப்படுகின்றனர். இவர்கள் அன்றாடம் எங்கு தங்குவது என்று தெரியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர் இதில் பெண் ஆசிரியர்களும் அடங்குவர். இவ்வாறு பெரும் துன்பங்களுக்கு இடையே போராடி வரும் இவர்களை அழைத்து அரசு எந்த பேச்சுவார்த்தையும் நடத்தாமல் இருப்பது கண்டிக்கத்தக்கதாகும். 

நியமனத்திற்காக வெயிட்டெஜ் மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக்கொள்ளும் முறையை இரத்து செய்து ஆசிரியர் தகுதித் தேர்வின் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கவேண்டும். 

பாராபட்சமான இவ்வெயிட்டேஜ் முறையை இரத்து செய்து சமூக நீதி அடிப்படையிலும் கிராமப்புற அரசு பள்ளி மற்றும் அரசு கல்லூரிகளில் பயின்றவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்கும்விதமாக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog