TET வழக்கு விசாரணை நாளை தொடரும்... 

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்து வாதமும் நடைபெற்றது.காலையில் 5% தளர்விற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தது. வாதி தரப்பில் திருமதி நளினி சிதம்பரம் அவர்கள் வாதாடினார்.

வாதத்தின் போது 5% தளர்வு வழங்கியதில் தவறில்லை.ஆனால் முன்தேதியிட்டுவழங்கியது என்றும் அரசியல் காரணங்களுக்காக கொடுக்கப்பட்டது என்றும் வாதாடிய திருமதி.நளினி சிதம்பரம் அவர்கள்.உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றையும் சுட்டிக்காட்டிப் பேசினார்..

அரசு தரப்பில் AG திரு.சோமையாஜி அவர்களும்,பள்ளிக்கவித்துறை சிறப்பு வழக்கறிஞர் திரு.கிறிஷ்ணகுமார் அவர்களும் வாதாடினார்கள். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு G.O 71 குறித்த விவாதம் நடைபெற்றது.எதிர்தரப்பு வாதம் முடிந்தது அரசுதரப்பு வாதம் நாளை தொடங்க உள்ளது.

Comments

Popular posts from this blog