TNTET வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற பட்டதாரி ஆசிரியர்கள். ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கு எதிராக சென்னையில் இன்று 15ஆவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இன்று மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.ரோசைய்யா அவர்களை சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவை சமர்பிக்க ஆளுநர் மாளிகை எதிரே கூடினர். ஆனால் ஆளுநர் இன்று நடைபெற இருந்த மந்திரி சபை மாற்றம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுக்கொண்டு இருந்ததால் அவர் சார்பாக அவரின் நேர்முக உதவியாளர் போராட்டக்கார்களில் 5 பேர் கொண்ட குழுவை மட்டும் அலுவலகத்தினுள் அனுமதித்து, கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் டெட் தேர்வர்களின் போராட்டம் பற்றி மத்திய அரசிடம் தெரிவிப்பதாகவும், விரைவில் ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து மனு வழங்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார். இதன் பிறகு தேர்வர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஆளுநர் மாளிகைக்கு வர இருக்கும் தகவல் அறிந்து அவரின் கவனத்தை கவர்வதற்காக காந்தி மண்டபத்தில் காத்திருந்தனர். ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே போலீசாரால் கைது செய்யப்பட்டு அவரவர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு சென்று விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து நாளை 16ஆம் நாள் போராட்டம் நடைபெற இருப்பதாக தேர்வர்கள் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog