தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில், காலியாக உள்ள முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில், காலியாக உள்ள முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும், 50 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மேல்நிலைப்பள்ளியில் ஒன்பது முதுகலை ஆசிரியர்கள் மற்றும் ஒரு தலைமை ஆசிரியர் என 10 பேர் இருக்க வேண்டும்; உயர் நிலைப்பள்ளியில் ஐந்து பட்டதாரி ஆசிரியர், ஒரு தலைமை ஆசிரியர் என ஆறு பேர் இருக்க வேண்டும். அதன்படி, தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளில் 300 பேர், மேல்நிலைப்பள்ளிகளில் ஆயிரம் பேர் என 1,300 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு, உடனடியாக ஆசிரியர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆசிரியர் பணியிடம் நிரப்ப தாமதமானால், மாணவர் கல்வி நலன் பாதிக்கப்படும்; பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் குறைய வாய்ப்புள் ளது. பதவி உயர்வு அடிப்படையில் ஆசிரியர் நியமிக்க காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதால், ஆசிரியர் தேர்வு வாரியம் சிறப்பு "கவுன்சிலிங்' நடத்தி, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments

Popular posts from this blog