கணினி ஆசிரியர் பதிவு முப்பு பட்டியலில் குளறுபடி சரி செய்யுமா? வேலை வாய்ப்பு அலுவலகங்கள்
பல மாவட்டங்களில் கணினி பயிற்றுநர் பணிக்கான பதிவினை சரிபார்க்க பட்டியல் ஒட்டப்பட்டுள்ளது. அதில் கணினி பாடம் பயிலாதவர்களையும் (வரலாறு வணிகவியல் கணிதம் மற்றும் பல பாடங்கள்) கணினி பயிற்றுநர் பணிக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இதனால் முறையாக பி.எஸ்.சி. கணினி அறிவியல் மற்றும் பி.எட் படித்தவர்கள் பாதிக்கப்படுவதோடு முறையான இடத்தில் தான் நாம் இருக்கிறோமா என்ற குழப்பம் ஏற்படும். மேலும் பி.எட் படித்த ஆண்டிற்கு பதிலாக பி.எஸ்,சி படித்த ஆண்டினை பதிவு காலமாக குறிப்பிட்டுள்ளனர் இந்த குறைபாடுகளை மாவட்டவேலைவாய்ப்பு அலுவலர் சரி செய்வதாக வாய்டிமாழியாக என்று உறுதி கூறியுள்ளார். இதனால் நீண்ட நாட்களாக வேலைக்காக காத்து இருக்கும் வேலை இல்லா பட்டதாரி கணினி ஆசிரியர்கள் பயன் அடையும் வகையில் வேலை வாய்ப்பு அலுவலர்கள் சரி செய்ய வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment