கல்வி கொள்கையில் மாற்றம்: மத்திய அரசு புதிய முயற்சி : துணைவேந்தர் பேச்சு 

காந்திகிராமம்: ''கல்வி கொள்கையில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது,'' என காந்திகிராம பல்கலை துணைவேந்தர் நடராஜன் தெரிவித்தார். மவுலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்த தினத்தை முன்னிட்டு கல்வியியல் துறை சார்பில் தேசிய கல்வி தின கருத்தரங்கு காந்திகிராம பல்கலையில் நடந்தது. 

கல்வியியல் துறைத்தலைவர் ஜகிதாபேகம் வரவேற்றார். புதுக்கோட்டை அன்னை கதீஜா கல்வி நிறுவனங்களின் தலைவர் சலீம் முன்னிலை வகித்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி துணைவேந்தர் பேசியதாவது: கல்வி கொள்கையில் மாற்றங்களை கொண்டுவர மனிதவள மேம்பாட்டுத்துறை முயற்சித்து வருகிறது. 

கல்வியியல் தகுதி மேம்பாட்டிற்காக ஓராண்டு படிப்பான பி.எட்., எம்.எட்., இரண்டு ஆண்டுகளாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து வகை கல்வியியல் கல்வியையும் பல்கலையின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது. மாணவர்கள் மனப்பாடம் செய்து படிப்பதை விட திறன் மேம்பாட்டிற்கும், பல்கலைகள் தொழிற்கல்விக்கும் அதிக முக்கியத்துவம் தர வேண்டும். 

ஆரம்ப கல்வியிலேயே தரமான கல்வியை அளித்தால் மாணவர்களுக்கு பல்கலை, கல்லூரிகளில் பயில எளிமையாக இருக்கும். இல்லாவிட்டால் உயர்கல்வி பயில தடுமாற்றம் ஏற்படும், என்றார். உதவி பேராசிரியர் ஸ்ரீதேவி நன்றி கூறினார்.

Comments

Popular posts from this blog