பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என காங்கயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் காங்கயத்தில் நடைபெற்றது . 

கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.அர்ஜுனன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் வி.செந்தில்குமார், மாநில பொருளாளர் கே.எம்.ஜான்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், 3 ஆண்டுகள் பணி முடிக்கும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாத ஊதியம் ரூ. 7 ஆயிரமாக உயர்த்தப்பட்டதாக அறிவிப்பு மட்டும் வந்துள்ளது. 

அந்தத் தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்து செலவினங்களைக் கருத்தில் கொண்டு, பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் தங்களது சொந்த ஊரில் பணியாற்றும் வகையில், பணி இடமாறுதல் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

.மாநிலப் பொறுப்பாளர் பொன்.சங்கர், காங்கயம் ஒன்றியச் செயலாளர் ஏ.சி.ஜெகன், ஒன்றியத் தலைவர் பி.யுவராஜ், ஒன்றியப் பொருளாளர் என்.முத்துக்குமார், ஈரோடு பொறுப்பாளர் இளமதி உள்பட 100-க்கு மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog