நவ., 25, 26ல் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு
மதுரையில் கள்ளர் சீரமைப்பு துறை பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமன கலந்தாய்வு நவ., 25, 26ல் நடக்கிறது.
இணை இயக்குனர் அமுதவல்லி தெரிவித்துள்ளதாவது: மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் செயல்படும் இத்துறை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பும், நியமன கலந்தாய்வும் இளங்கோ மாநகராட்சி பள்ளியில் நவ., 25, 26ல் நடக்கின்றன.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்டு இவ்வலுவலகத்தால் அழைப்பு கடிதம் கிடைக்கப் பெற்றவர்கள் அசல் கல்வி சான்றுகளுடன் காலை 9 மணிக்கு கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது! நாடாளுமன்றத்தில் தகவல். தமிழ்நாட்டில் இன்னும் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த விசிக எம்.பி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து, முடக்கி வருகின்றன. இதற்கிடையில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமனா பதில்களை தெரிவித்து வரும் நிலையில், பல்வேறு மசோதாக்களையும் விவாதமின்றி நிறைவேற்றி வருகிறது. இந்த நிலையில், விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் '2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் அனுமதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை, அதில் நிரப்படாமல் உள்ள பணியிடங்கள் எத்தனை?, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான 1-8 வகுப்புகளுக்கான மொத்த ஆசிரியர் காலி
Comments
Post a Comment