FLASH NEWS : புதிய பள்ளி கல்வித்துறை துணை செயலாளர் -தமிழக அரசு உத்தரவு
தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவின்படி, சுபோத்குமார் பள்ளி கல்வித்துறை துணை செயலாலராகவும், கே.எஸ்.கந்தசாமி மற்றும் ஷில்பா பிரபாகர் சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்களாகவும், பிங்க்ளே விஜய் மாருதி தொழிற்துறை இணை செயலாளராகவும்,
கே.விஜயகார்த்திகேயன் கோவை மாநகராட்சி கமிஷனராகவும், பிரவீன் பி.நாயகர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment