TNPSC : குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர் பணியிடம் 117 இடங்கள் நேரடி நியமனம்
குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர் பணியில் 117 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு பொது பணியிலு ள்ள குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர் பதவியில் 117 காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இப்பதவிக்கு பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஊட்டச்சத்து அல்லது மனையியல் பாடப்பிரிவில் இளங்க லைப் பட்டம் அல்லது இளங்கலைப் பட்டத்துடன் கூடிய காந்திகிராம் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட ஊரக பணியில் முதுகலை பட்டயப்படிப்பு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்காக, www.tnpsc.gov.inஎன்ற முகவரியில் இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பதவிக்கான எழுத்து தேர்வு பிப்ரவரி 15ம் தேதி சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மையங்களில் நடைபெறும். முற்பகல் மற் றும் பிற்பகல் என இத்தேர்வு நடக்கும். இப்பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் டிசம்பர் 26ம் தேதி. மற்ற விவரங்களை தேர்வாணையத் தின் www.tnpsc.gov.inஎன்ற இணையதள முகவரியில் காணலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment