அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் புதிதாக 128 அரசு தொடக்கபள்ளிகள்

 256 ஆசிரியர் பணியிடங்கள் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் இல்லாத 128 குடியிருப்பு பகுதிகளுக்கு 27 மாவட்டங்களில் புதிதாக 128 பள்ளிகள் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்த பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கவும், புதிதாக கட்டிடங்கள் கட்டவும் அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கு ஒரு இடைநிலை ஆசிரியர், ஒரு தலைமை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

புதிய ஆசிரியர்கள் நியமிக்கும் வரை மாற்றுப்பணிகள் வாயிலாக ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கத்தால் புதிய கட்டிடம் கட்டப்படும். எனவே தொடக்க கல்வி அலுவலர்கள், அனைவருக்கும் கல்வி இயக்கத்தை அணுகி போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தொடக்க கல்வி இயக்குநர் சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 அந்த வகையில் தமிழகத்தில் 256 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். இதன் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.19 கோடி 43 லட்சம் செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிதாக தொடக்க பள்ளிகள் கோவை-1, தர்மபுரி-6, திண்டுக்கல்-10, ஈரோடு- 12, காஞ்சிபுரம் -6, கரூர்-7, கிருஷ்ணகிரி-16, மதுரை-4, நாமக்கல்-3, நீலகிரி-1, பெரம்பலூர்-3, புதுக்கோட்டை-4, ராமநாதபுரம்-4, சேலம்-2, சிவகங்கை-4, தஞ்சை-1, தேனி-2, திருச்சி-2, திருநெல்வேலி-3, திருப்பூர்-3, திருவள்ளூர்-4, திருவாரூர்-5, திருவண்ணாமலை -6, தூத்துக்குடி-2, வேலூர் - 8, விழுப்புரம் -7, விருதுநகர்-2 என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு மட்டும் பள்ளிகள் ஏதும் புதிதாக திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog