5% மதிப்பெண் தளர்வில் வெற்றிபெற்றவர்கள் கவனத்திற்கு... 

TNTET 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் 5% மதிப்பெண் தளர்வை மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் அறிவித்தனர். தற்போது மதுரை உயர்நீதிமன்றம் அதற்கான அரசாணை எண்.25 இரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் 5% மதிப்பெண் தளர்வு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது உள்ளது. 

இந்த நிலையில் நாம் இரத்து செய்வதற்கு முன்னர் 5% மதிப்பெண் தளர்வில் வெற்றி பெற்ற பலர் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்துள்ளோம்.

 அதில் பலர் பணி நியமனம் பெற்றுள்ளனர் சிலர் பணி நியமனத்திற்கு காத்திருத்த நேரத்தில் இந்த 5% மதிப்பெண் தளர்வு அரசாணை இரத்து செய்யப்பட்டதால் நாம் சேர இருந்த அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது நம்மை ஆசிரியர்களாக சேர தகுதி இல்லை என கூறி வெளியேற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பலர் அரசு உதவி பெறும் பள்ளியில் வேலைக்கு சேரும் நிலையில் இருக்கின்றனர் எனவே இந்த அரசாணை இரத்து செய்யப்பட்டாலும் நமக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்துள்ள இந்த சான்றிதழ் செல்லும் என்று அரசு கருணையுடன் அறிவிக்க அரசிடம் கோரிக்கை வைப்போம். 

 அரசு பள்ளியில் ஆசிரியர் வேலைக்கு அரசு எடுக்கும் முடிவுக்கு கட்டுபடுவோம். தற்போது அரசு உதவி பெறும் பள்ளியில் வேலை கிடைக்க இந்த சான்றிதழ் செல்லுபடியாகும் என அரசு அறிவிக்க மனு அளிப்போம்.மேலும் 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றிபெற்ற நம்மையும் சேர்த்து இனி வரும் காலிபணியிடங்கள் நிரப்பவும் கோரிக்கை வைப்போம். 

நண்பர்களே 5% மீண்டும் வேண்டி மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின் படி செயல்படும் தமிழக அரசுக்கு ஒரு மனுகொடுப்போம் இதற்கு 5% மதிப்பெண் தளர்வில் வெற்றி பெற்றவர்கள் அனைவரையும் மாவட்ட வாரியாக ஒருங்கினைத்து ஒருவர் பொறுப்பேற்று ஒன்று சேர்ந்து மனுக்களில் கையெழுத்துயிட்டு நம்மில் ஒருவர் அந்த மனுவை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் கொடுப்போம் நம்மீது கருணை கொண்ட மக்கள் அரசு கண்டிப்பாக உறுதியாக நமது கோரிக்கையை ஏற்பார்கள் 

எனவே ஒன்று சேருங்கள் நமது உரிமைக்காக அமைதியான முறையில் தமிழக அரசை வலியுறுத்துவோம். இப்படிக்ககு K.ரஞ்சித்குமார் பொள்ளாச்சி கோவை மாவட்டம் 8883161772 தமிழக TNTET 2013 - 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றி பெற்ற நண்பர்கள் அமைப்பு பொறுப்பாளர் John Shibu Manick நீலகிரி மாவட்டம் 9659340311 நீலகிரி மாவட்ட ஒருங்கினைப்பாளர் மற்ற மாவட்ட நண்பர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும்.

Comments

Popular posts from this blog