இன்று முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு

தமிழகம் முழுவதும் 2 லட்சம் பேர் பங்கேற்கும் முதுநிலைப் பட்டதாரிஆசிரியர் போட்டித் தேர்வு சனிக்கிழமை நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 499 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆசிரியர் தகுதித் தேர்வின்போது போலி வினாத்தாள்கள் விற்பனை செய்யப்பட்ட தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இந்தத் தேர்வுக்காகக் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வினாத்தாள் மையங்களில் ஆயுதமேந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதோடு, ஒவ்வொரு வினாத்தாள் மையத்திலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.

தருமபுரியில் உள்ள இணைய சேவை மையங்கள், நகலகங்கள், பாலங்கள் உள்ளிட்ட மறைவான இடங்களில் போலீஸார், அரசு அலுவலர்கள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன், மாவட்ட போலீஸ் எஸ்.பி. லோகநாதன் ஆகியோருடன் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த மாவட்டத்தில் தேர்வுப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

Comments

  1. Tet 2nd list trb silent-aa post valiya poduratha cholluranga.appatena 3court-il 2010 cv mudithavarkalukku job entra judgement enna achu.job 2010cv mudithavarkalukku job any chance irrukka? Please tell me sir.

    ReplyDelete
  2. Gaja sir,
    இரண்டாவது பட்டியல் அல்ல நண்பர்களே....தவறான தகவலுக்கு வருந்துகிறோம்
    source www.kalviseithi.com
    TET 2013 தேர்ச்சி பெற்ற Absent ஆனவர்களுக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு.
    Source www.kalviseithi.com
    cv 2010 case after will come pongal

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog