27ம் தேதி முதல் வி.ஏ.ஓ., கலந்தாய்வு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

கிராம நிர்வாக அலுவலர் - வி.ஏ.ஓ., பணிக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, 27ம் தேதி முதல் துவங்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் - டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.

இதுகுறித்த அறிவிப்பு: டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 2013 - 14க்கான வி.ஏ.ஓ., எழுத்துத் தேர்வு, கடந்த ஆண்டு ஜூனில் நடந்தது; டிசம்பரில், முடிவுகள் வெளியானது. இதில், தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஜன., 27 முதல், பிப்., 12ம் தேதி வரை டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கிறது.

இதற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின், தரவரிசை அடங்கிய பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில், வெளியிடப்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு. கலந்தாய்வு அழைப்பு, விரைவு அஞ்சல் மூலம், தனியாக அனுப்பப்பட்டு உள்ளது. அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என உறுதி கூற இயலாது. விண்ணப்பதாரர் அளித்துள்ள தகவல்கள், தவறாக இருந்தால் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்விற்கு வரத் தவறினால், மறு வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Comments

Popular posts from this blog