டி.ஆர்.பி., போட்டித்தேர்வு கேள்வித்தாள் கோவை வந்தது

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில், நடக்கவுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வுக்கான கேள்வித்தாள் கோவை வந்தது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில், தமிழகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில், காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான (2013-- -14, 2014---15) போட்டித்தேர்வுகள், ஜன., 10ம் தேதி மாநிலம் முழுவதும் நடக்கிறது.

கோவை மாவட்டத்தில், 19 மையங்களில், 7500 பேர் தேர்வில் பங்கேற்கவுள்ளனர்.இத்தேர்வுக்கான, பணிகள் கோவையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல், தேர்வு மையங்கள் ஆய்வு, மைய பொறுப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், கூடுதல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டவர்களை தேர்வு செய்தல் போன்ற பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கேள்வித்தாள்கள் கோவைக்கு வந்தன. இயற்பியல், வேதியியல், கணிதம், பொருளாதாரம், வணிகவியல் உட்பட பாடவாரியாக கேள்வித்தாள் கட்டுக்கள் மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில், காவல்துறையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. கேள்வித்தாள் வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு, குறிப்பிட்ட சில அலுவலர்கள், அதிகாரிகள் தவிர பிறர் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog