தகுதித்தேர்வை நீக்கக்கோரி ஆசிரியர்கள் பேரணி விழுப்புரத்தில் நடந்தது.

விழுப்புரத்தில் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் சார்பில் தகுதித்தேர்வை நீக்கக்கோரி பேரணி நடைபெற்றது.

கவன ஈர்ப்பு பேரணி
தமிழ்நாடு ஆசிரியர் இயக் கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் பாலன் தலைமை தாங்கினார். செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி வரவேற்று பேசினார். மாநில அமைப்பு செயலாளர் முருகன் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்களது கைகளில் கோரிக்கைகள் அடங்கிய விளம்பர பதாகை களை ஏந்தி சென்றனர். விழுப்புரம் ரெயிலடியில் இருந்து தொடங்கிய பேரணி, திருச்சி சாலை வழியாக சென்று கலெக்டர் அலு வலகத்தில் முடிவடைந்தது.

தகுதித்தேர்வை நீக்கக்கோரி
ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்து பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கையை அடிப் படையாக கொண்டு தொடக் கப்பள்ளிகளை மூடும் நோக்கத்தை கைவிட்டு அனைத்து பள்ளிகளும் செயல்பட தமிழக அரசு நடவடிக்கை எடுப்பது, தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைக்கல்வி வரை தாய் மொழியான தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் எவ்வித பதவி உயர்வும் இல்லாமல் 30 ஆண்டுகள் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.


Comments

Popular posts from this blog