ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணையை உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 21-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணையை உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 21-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

லாவண்யா உள்ளிட்ட சிலர் , ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மற்றும் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதால், தகுதியானவர்கள், தகுதியிழப்பு செய்யப்படுகின்றனர். எனவே, வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி இப்ராஹீம் கலிஃபுல்லா தலைமையில் நடந்தது.வழக்கின் இறுதி விசாரணை, ஏப்ரல் 21-ம் தேதி நடக்கும் எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

தற்போது தமிழகத்தில்10,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்பும் பணி வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதற்கு முன்பாக உச்சநீதிமன்றம் தலையிட்டு தங்களுக்கு உரிய நீதியை வழங்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog