அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணி ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடக்கம்

தமிழகம் முழுவதும் அரசு உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 4,362 ஆய்வகஉதவியாளர்கள் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு முதலில் எழுத்துத்தேர்வும் அதில் வெற்றிபெறுவோருக்கு நேர்முகத்தேர்வும் நடத்தப்படும்.

எழுத்துத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று தொடங்கியது. சிறப்பு சேவை மையங்களுக்கு தேர்வர்கள் நேரில் சென்று விண்ணப் பித்தனர்.

சென்னையில் சாந்தோம் மேல்நிலைப் பள்ளி மையத்துக்கு அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் சென்று ஆய்வு செய்தார். முதல் நாள் என்பதால் குறைந்த எண்ணிக் கையிலான தேர்வர்களே விண் ணப்பிக்க வந்திருந்தனர். ஆய் வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மே 6-ம் தேதி. எழுத்துத்தேர்வு மே 31-ம் தேதி நடைபெற உள்ளது

Comments

Popular posts from this blog