டி.என்.பி.எஸ்.சி., தலைவராக கே.அருள்மொழி நியமனம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் புதிய தலைவராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி அருள்மொழி நியமிக்கப்பட்டு உள்ளார்.

தமிழக அரசு நேற்றிரவு பிறப்பித்த அரசாணையில், 'டி.என்.பி.எஸ்.சி.,யின் புதிய தலைவராக, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முதன்மை செயலாளராக பணியாற்றும் கே.அருள்மொழி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 62 வயது வரை அல்லது ஆறு ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் நீடிப்பார்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், 1958 மார்ச், 26ல் பிறந்த அருள்மொழி, தோட்டக்கலைத் துறையில், எம்.எஸ்சி., மற்றும் பி.எச்டி., பட்டம் பெற்றுள்ளார். ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றதும், 1985ல், செங்கல்பட்டு சப் - கலெக்டராக பணியை துவங்கினார்.பின், வேளாண் துறை இயக்குனர், பணியாளர் நிர்வாகத்துறை செயலர், வணிகவரித் துறை செயலர், மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலர், நிதித்துறை சிறப்பு செயலர், முதல்வரின் சிறப்பு செயலர் என, பல பதவிகளை வகித்துள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி., தலைவராக இருந்த வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன், 2014 ஜூனில், ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வானதால், அந்தப் பொறுப்பை, உறுப்பினர் பாலசுப்பிரமணியன் கூடுதலாக கவனித்து வந்தார். தற்போது, தலைவர் பதவிக்கு அருள்மொழி நியமிக்கப்பட்டு உள்ளார்.

Comments

Popular posts from this blog