ஆண்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டிய தருணம் இது: தில்லி நீதிமன்றம்
ByPTI, புது தில்லி
First Published :11 January 2016 03:04 PM IST
பொய்யான பலாத்கார வழக்கு ஒன்றில் வழக்குரைஞர் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்ட நிலையில், ஆண்களைப் பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டிய தருணம் இது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

வழக்குரைஞரிடம் பணியாற்றிய பெண், அவர் மீது பொய்ப் புகார் கூறியிருந்ததும் நிரூபிக்கப்பட்டுள்ளது. பலாத்கார வழக்கில், நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்ட வழக்குரைஞர், இந்த பொய் வழக்கால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாகவும், வழக்கில் தான் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டாலும், தன்னை ஒரு குற்றவாளியைப் போலவே இந்த சமுதாயம் கருதுவதாகக் கூறி தில்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த கூடுதல் வழக்குரைஞர் நிவேதிதா அனில் ஷர்மா, மனுதாரர் குறிப்பிடும் விஷயத்தை எளிதாக விட்டுவிட முடியாது. மன அழுத்தம், சமுதாயத்தா அவர் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியிருப்பார்.

அவர் குற்றம்சாட்டப்பட்ட போது அனைவருக்கும் அது தெரிந்திருக்கும். ஆனால், அவர் விடுதலை செய்யப்பட்டதை யாரும் கவனித்திருக்கமாட்டார்கள். அவர் தொடர்ந்து குற்றவாளி என்ற பார்வையிலேயே பார்க்கப்படுவார். அவரது மதிப்பு, மரியாதையை மீண்டும் கொண்டு வருவது இயலாதக் காரியம். அதற்காக அவருக்கு இழப்பீடு கொடுத்தாலும் அது சரியாக இருக்காது. எனவே, இந்த நீதிமன்றம், ஆண்களை, பொய் வழக்குகளில் இருந்து காப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

ஆண்களின் மரியாதை, கௌரவம் ஆகியவற்றை காப்பாற்ற ஒருவரும் போராடுவதில்லை, அனைவருமே பெண்களின் கௌரவம், மரியாதையைக் காப்பாற்றுவது பற்றியே பேசி வருகிறோம். பெண்களைக் காப்பாற்ற ஏராளமான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால், பொய் வழக்குப் போட்டு ஒரு ஆணை குற்றவாளியாக்கும் பெண்களிடம் இருந்து ஆண்களைக் காப்பாற்ற ஒரு சட்டம் கூட இல்லை. எனவே, ஆண்களைப் பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டிய தருணம் இது என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog